"குடியரசுத் தலைவரை அழைக்காதது நவீன தீண்டாமை" - இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்

 
ranjith-34

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க குடியரசுத் தலைவரை அழைக்காதது நவீன தீண்டாமை என்று இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

tn

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். 64 ஆயிரத்து 500 சதுர அடியில் முக்கோண வடிவில் நான்கு மாடிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது .ஆனால் மரபு படி நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் குரல் கொடுத்துள்ள நிலையில் , நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.  நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேறப்போவதில்லை என்னும்  முடிவை மறுபரீசிலனை செய்து, திறப்பு விழாவில் பங்கேற்குமாறு  நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்  பிரகலாத் ஜோஷி எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

pa ranjith

இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில்,  "புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க குடியரசு தலைவரை அழைக்காதது நவீன தீண்டாமை சாதி பாகுபாடுகளை தீர்ப்பதற்கு பதிலாக சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் தீய வழக்கம் தொடர்கிறது. பழங்குடி சமூகத்தை சேர்ந்த நாட்டின் முதல் குடிமகனை அழைக்காதது கண்டனத்திற்குரியது. 

கட்சி பேதமின்றி, தேசத்தின் முதல் குடிமகள் மற்றும் சாமானிய மக்கள் சாதியால் நிறைந்த இந்திய சமூகமாகவே நீடித்திருப்பது அவலம். ஏனெனில், அவர்கள் அனைவரும் சடங்குகள் மற்றும் கலாச்சாரம் மூலம் இந்து சமூக ஒழுங்கை நிலைநிறுத்துகிறார்கள்.



கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை கருத்தில் கொள்ளாமல் பல கட்சிகளும், அரசாங்கங்களும் வந்து சென்றுள்ளன, அவை அனைத்தும் கலாச்சார தூய்மையைப் பாதுகாக்கவே பாடுபட்டன. மேலும் ஏற்கெனவே இருக்கும் சடங்குகளின் வடிவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்காமல், தொடர்ந்து தீண்டாமை, சாதிப் பாகுபாடு மற்றும் சாதியின் பெயரால் புதிய வடிவங்களைத் தொடர்ந்து உருவாக்குகின்றன. அரசியல் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமாக பாஜக செயல்பட்டு வருகிறது. ஆட்சிக்கு எதிராக கடும் கண்டனங்கள்."என்று பதிவிட்டுள்ளார்.