புதிய அமைச்சர்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்..!

 
1

இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் 

தமிழக சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னிஅரசு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஐயுஎம்எல் (IUML) கட்சியைச் சேர்ந்த தோழர் ஷாஜகான் ஆகியோருக்கு 'நீலம் பண்பாட்டு மையம்' சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நெடுங்காலமாக இருந்து வருகிற துறையாக இருந்தாலும், அது உருவாக்கப்பட்டதின் நோக்கத்தை உணர்ந்து, பட்டியலின மக்களின் அரசியலைப் பேசி வளர்ந்த ஒரு இயக்கத்தின் கைகளுக்கு இன்று அது வந்திருக்கிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் உரிமைகளையும் மையமாக வைத்து, இத்துறை உண்மையான மாற்றங்களுக்கான கருவியாக செயல்பட வேண்டும். அந்தப் பொறுப்பை தோழர் வன்னியரசு அவர்கள் சிறப்பாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 

இதைச் சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.