மூத்த இயக்குனர் ஓம் சக்தி ஜெகதீசன் மறைவு!!

 
tn

பிரபல மூத்த இயக்குனர் ஓம் சக்தி ஜெகதீசன் வயது மூப்பு காரணமாக காலமானார்.  அவருக்கு வயது 95.

tn

 தமிழில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி,  சமயபுரத்தாளே சாட்சி,  மேல்மருவத்தூர் அற்புதங்கள்,  பதில் சொல்வாள் பத்ரகாளி,  கை கொடுப்பாள்  கற்பகாம்பாள், ஒரே தாய் ஒரே குலம்,  இவர்கள் இந்தியர்கள்,  திசை மாறிய பறவைகள் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஓம்சக்தி ஜெகதீசன்.

tn

இவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான இதயக்கனி படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.  அத்துடன் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான சிரஞ்சீவி என்ற படத்தின் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ளார்.  நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ,தெலுங்கு ,கன்னட மொழிகளில் பணியாற்றிய இவர் , வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.  ஓம் சக்தி ஜெகதீசனின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.