"நாடக காதலால் பாதிக்கப்படும் பாவப்பட்ட பெற்றோர்களுக்கு வழி காட்டுங்கள்.."- இயக்குனர் மோகன்

 
ச்

தமிழகம் முழுக்க நாடக காதலால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு சட்டரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உடன் நிற்க, உதவ ஒரு அமைப்பு தேவை என பலர் என்னிடம் கோரிக்கை வைத்திருப்பதாக இயக்குனர் மோகன் ஜி கூறியுள்ளார்.


திருப்பத்தூரில் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் திருமணம் செய்த ஜோடி தஞ்சம் புகுந்தனர். பெண்ணிடம் பெற்றோர் கெஞ்சி காலில் விழுந்து கதறியும் பெண் கணவனுடன் செல்ல முடிவெடுத்தார். போலீசாரும் இந்த ஜோடியை தொந்தரவு செய்யக்கூடாது என பெற்றோர்களிடம் எச்சரிக்கை செய்து அனுப்பினர். இந்த செய்தியை மேற்கோள்க் காட்டியுள்ள இயக்குனர் மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில், “தமிழகம் முழுக்க நாடக காதலால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு சட்டரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உடன் நிற்பதற்கும், உதவுவதற்கு ஒரு அமைப்பு தேவை என பலர் என்னுடன் தொலைபேசியில் கோரிக்கை வைக்கிறார்கள்.. எதிர் தரப்பில் குறைந்தது 20 வழக்கறிஞர்கள், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் உடனடியாக ஒன்று கூடுகிறார்கள் எனவும் அவர்களை எதிர்த்து இந்த அமைப்பு களத்தில் நிற்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.. இதற்கு என்ன வழி.. இந்த பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு வழிகாட்ட வழக்கறிஞர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்க முடியாதா.. இல்லை எதாவது ஒரு அமைப்பு தயார் என்றால் ஒரு press meet வைத்து உங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.. பாவப்பட்ட இந்த பெற்றோர்களுக்கு வழி காட்டுங்கள்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.