கண்ணகி நகர் கார்த்திகாவை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்தினார் இயக்குனர் மாரி செல்வராஜ்..!!
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் அணியின் துணை கேப்டனாக இருந்து சிறப்பாக செயல்பட்ட சென்னை கண்ணகி நகரைச்சேர்ந்த கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
போட்டி முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகாவை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து தென்சென்னை திமுக சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கார்த்திகாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதையடுத்து சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கார்த்திகாவை நேற்று அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரூ.1 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை கார்த்திகாவிடம் பழனிசாமி வழங்கினார்.
தற்போது, கார்த்திகாவை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்தினார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
இது குறித்து தனது எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ள மாரி செல்வராஜ்,
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய U-18 பெண்கள் கபடி அணியின் துணைத் தலைவராக விளையாடிய கார்த்திகா இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித்தந்து இறுதிப் போட்டியில் ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்த தங்கமகள் கார்த்திகாவையும், இந்த வெற்றிக்கு பக்க பலமாக இருந்த அவரது கண்ணகி நகர் கபடிக்குழுவின் முயற்சியை பாராட்டி கவுரவிப்பதற்காக கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று இன்று எனது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொண்டேன். அதோடு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கார்த்திகாவிற்கும் ₹ 5 லட்சமும், அவர்களது கண்ணகி நகர் கபடி குழுவிற்கு ₹ 5 லட்சமும் காசோலைகள் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களின் நீலம் ஸ்டூடியோஸ் சார்பாகவும், அப்ளாஸ் என்டேர்டைன்மெண்ட் சார்பாகவும மற்றும் பைசன் படக்குழு சார்பாகவும் வழங்கி மகிழ்ந்தேன்..
இன்னும் இது போல் வேலியே போட முடியாத பல வெற்றிகளை கண்ணகி நகர் கார்த்திகாக்கள் பெறட்டும் என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய U-18 பெண்கள் கபடி அணியின் துணைத் தலைவராக விளையாடிய கார்த்திகா இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித்தந்து இறுதிப் போட்டியில் ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியில் அவர் முக்கிய… pic.twitter.com/nzTwkf1Aia
— Mari Selvaraj (@mari_selvaraj) October 30, 2025
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய U-18 பெண்கள் கபடி அணியின் துணைத் தலைவராக விளையாடிய கார்த்திகா இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித்தந்து இறுதிப் போட்டியில் ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியில் அவர் முக்கிய… pic.twitter.com/nzTwkf1Aia
— Mari Selvaraj (@mari_selvaraj) October 30, 2025


