இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கடைசி புகைப்படம்..! கண்ணீர் வரவழைக்கும் போட்டோ..!

 
1

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜா இன்று காலை காலமானார். 

1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியுலகிற்கு கொண்டு வந்த பெருமைக்கு சொந்தக்காரர். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், ராதிகா, ராதா, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் பலரையும் அறிமுகம் செய்துள்ளார். சிவாஜி நடிப்பில் இயக்கிய முதல் மரியாதை திரைப்படம் இன்றைக்கும் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளமாக நிலைத்திருக்கிறது. 

அதேபோல், கிழக்கே போகும் ரயில், கல்லுக்குள் ஈரம், கைதியின் டைரி, அலைகள் ஓய்வதில்லை, புதிய வார்ப்புகள், வேதம் புதிது என பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக மீண்டும் ஒரு மரியாதை என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தார்.  இயக்குனராக மட்டும் இல்லாமல், ஆயுத எழுத்து, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடிகராகவும் நடித்து அசத்தியுள்ளார். 

இதனிடையே, அவரது ஒரே மகனும், நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா கடந்த ஆண்டு மார்ச் மாதம் மரணமடைந்தது அவரை சோகத்தில் ஆழ்த்தியது.  மகன் மரணத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வந்த பாரதிராஜா, தற்போது வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறை காரணமாக மரணமடைந்தார், 

இந்நிலையில் பாரதிராஜாவின் பூத உடலின் புகைப்படம் சற்று முன் வெளியாகியது.