இயக்குநர் சேரனின் தந்தை காலமானர்!!

 
tn

இயக்குனரும் நடிகருமான சேரனின் தந்தை பாண்டியன் இன்று அதிகாலை உயிரிழந்தார். மதுரை மாவட்டத்திலுள்ள பழையூர் பட்டியில் உள்ள தனது சொந்த வீட்டில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.

tn

 84 வயதான இவர் சினிமா ஆப்ரேட்டராக பணிபுரிந்தவர்.  கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இயக்குநர் சேரன் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சேரனின் தந்தை பலருக்கும் பரிட்சயமானவராக மாறினார்.

tn

 சேரன் தந்தையின் இறுதி சடங்குகள் பழையூர் பட்டியில் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சேரனின் தந்தை மறைவையொட்டி பிரபலங்களும் ,ரசிகர்களும் அவருக்கு தங்களது இரங்கலையும் ,ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.