இயக்குநர் பாரதிராஜாவின் மகன் காலமானார்!
Updated: Mar 25, 2025, 20:26 IST1742914581113

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். நடிகரும், இயக்குனருமான இவர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 48. மாலை 6 மணி அளவில் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இருக்கும்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அங்கேயே அவர் காலமானார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிம்ஸ் மருத்துவமனையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன் பிறகு, வீட்டில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து கொண்டு ஓய்வில் இருந்துள்ளார். இரண்டு, மூன்று தினங்களாக உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான மனோஜ், சமுத்திரம், விருமன், மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.