எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அதிகாரத்திற்கு வருவது தான் பாஜகவின் கொள்கை- இயக்குநர் அமீர்

 
director amir

ஆளுநர் மூலமாக ஆட்சியைக் கவிழ்த்து அவர்களது ஆட்சியை அமைப்பது அல்லது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அதிகாரத்திற்கு வருவது தான் பாஜகவின் கொள்கையாக உள்ளது என திரைப்பட இயக்குனர் அமீர் பேட்டி அளித்தார்.

Ameer- Ameer Sultan - Ameer Sulthan, Tamil director - interview

புதுச்சேரியில் தனியார் நிகழ்வில் பங்கேற்க வந்த திரைப்பட இயக்குனர் அமீர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மக்களுக்கான ஆட்சி நடைபெறவில்லை. கார்ப்பரேட் முதலாளி கான ஆட்சியாகவே தான் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேல் அதே பாதையில் தான் அவர்கள் பயணிப்பார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை என்றார். ஆளுநர் மூலமாக ஆட்சியைக் கவிழ்த்து அவர்களது ஆட்சியை அமைப்பது அல்லது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அதிகாரத்திற்கு வருவது தான் பாஜகவின் கொள்கையாக உள்ளது. தனக்கு எதிரியான யாராவது வந்தால் அவர்கள்  மீது வழக்கு போடுவது அல்லது ஆளையே காலி பண்ணுவது தான் இந்த பாசிச ஆட்சியில்  நடக்கிறது. எந்த காலத்திலும் அவர்கள் மாறப்போவதில்லை.

ஜனநாயகத்தின் பெயரில் நடைபெறும் கொடுங்கோல் ஆட்சி இது. மக்கள் அதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்துள்ளனர். வடமாநில இதன் தாக்கம் அதிகமாக தெரிகிறது. ஆனால் அங்கு நடப்பது  தென்னிந்தியாவிற்கு சொல்லப்படுவதில்லை. வருங்காலத்தில் இது எதிரொலிக்கும். ஆனால் அதிகாரம் கையில் இருப்பதால் அவர்கள் கவலைப்படவில்லை. இலங்கையின் தாக்கம் இந்தியாவிற்கு வருவதற்கு ரொம்ப நாள் இல்லை. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தும் தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்.  பள்ளி மாணவர்களின் இறப்பு என்பது மாநில அரசுக்கு கிடைக்கும் அவமானம்.பள்ளிகளில் நடைபெறும் தொடர் மரணங்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” எனக் கூறினார்.