பிரபல இயக்குநரின் தாயார் மரணம் - திரையுலகினர் அஞ்சலி!!

 
tn

தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மனைவியும்,  இயக்குநர் ஏ. எல். விஜய்யின் தாயாருமான வள்ளியம்மை இன்று காலமானார்.

alvijay-23
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும்,  தயாரிப்பாளருமானவர் ஏ. எல். அழகப்பன். இவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் ,  அரசியல்வாதியாகவும் அறியப்பட்டவர்.  இவர் நடத்த ஈசன் திரைப்படம் பலரையும் வெகுவாக கவர்ந்தது. இவரது மகன்கள் உதயா மற்றும்  இயக்குநர் ஏ. எல். விஜய் ஆவர்.

tn

இந்நிலையில்  அழகப்பனின் மனைவி வள்ளியம்மை  இன்று காலை  உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். வள்ளியம்மை மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் கூறி  வருகின்றனர். 

al-alagappn-33

இயக்குநர் ஏ.எல். விஜய் தமிழில் கிரீடம், மதராசபட்டினம், தெய்வத்திருமகன், தலைவா, சைவம், தலைவி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.