அதிர்ச்சி சம்பவம்! வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வனப்பகுதியில் அமைதிசோலை என்ற இடத்தின் அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார்? கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை முயற்சியா? என்பது போலீஸ் விசாரணைக்கு பின் தெரிய வரும். வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.