சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

 
tn

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரத்தில் உள்ள சுங்கச்சாவடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


திண்டுக்கல் மாவட்டம்,  வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த பகுதியில் சுங்க சாவடி அமைக்கப்பட்டு இன்று திறக்கப்படுவதாக இருந்தது. இந்த நிலையில், சாலை பணிகள் முழுவதுமாக நிறைவடையாமல் சுங்க சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பால பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் தீர்வு எட்டப்படாததால் ஆத்திரம் அடைந்த மக்கள், சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். 

இன்று காலை சுங்கச்சாவடி திறக்கப்பட இருந்த நிலையில் பொதுமக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ள நிலையில், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.