"தமிழ்நாட்டை ஆட்சி செய்வது ஸ்டாலினின் செருப்பு"- திண்டுக்கல் லியோனி

 
a

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திண்டுக்கல் லியோனி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சலசப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக நிர்வாகியும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி, "ராமரின் செருப்பு எப்படி அயோத்தியை ஆண்டதோ, தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே நீங்கள் அவிழ்த்து வைத்த உங்கள் செருப்பு தான் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. முந்தைய திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களால் தான் தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியின் மகளிர் உரிமைத்தொகை, மெட்ரொ ரயில், காலை உணவு திட்டங்களை வைத்து தான் ஆட்சி நடக்கிறது. மு.க.ஸ்டாலினை நினைத்து பார்த்து தான் அந்த திட்டங்களின் பலன்களை மக்கள் அனுபவிக்கின்றனர்" என்றார்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திண்டுக்கல் லியோனி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சலசப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து முதல்வர் விஜயை ஒருமையில் பேசுவது தகாத வார்த்தைகளில் பேசுவது போன்றவற்றை செய்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.