“6 முன்னாள் எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி பழனிசாமி விடமாட்டார்”- திண்டுக்கல் சீனிவாசன்
Aug 21, 2026, 22:06 IST1787330214475
கொறடா உத்தரவை மீறிய 6 எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்காமல் பழனிசாமி விடமாட்டார் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “கொறடா உத்தரவை மீறிய ராஜினாமா செய்த 6 முன்னாள் எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி பழனிசாமி சும்மா விடமாட்டார். இடைத்தேர்தலில் அவர்கள் வென்றாலும் உச்சநீதிமன்றம் வரை சென்று பதவியை பறிப்பார். சி.வி.சண்முகம், வேலுமணி போன்றோர் பதவி கிடைக்காததால் தனி அணியாக உள்ளனர். ஆத்திரத்தில் தனி அணியாக செயல்பட்டு அதிமுகவுக்கு துரோகம் செய்கின்றனர். அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்” என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

