காலை உணவு திட்டத்தை கொண்டுவந்தவர் எடப்பாடி பழனிசாமி! உளறிய திண்டுக்கல் சீனிவாசன்

 
dindigul srinivasan

காலை உணவு திட்டத்தை ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறி கொட்டிய சம்பவம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

Power to Dindigul Srinivasan'- Banks accept Edappadi Palaniswami's letter |  PiPa News

தமிழக அரசு தற்பொழுது மின் கட்டண உயர்வை அமல்படுத்தி உள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள கல்லறை தோட்டம் அருகே திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் பேசிய அவர், “காலை உணவு திட்டத்தை எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி ஆகியோர் ஏற்கனவே கொண்டு வந்ததை தான் தற்பொழுது திமுக தலைவர் மு க ஸ்டாலின் புதிதாக கொண்டு வந்ததாக சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்” என தெரிவித்தார்.