த.வெ.க. திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் கைது..!
Oct 13, 2025, 07:45 IST1760321734000
கரூர் துயரம் தொடர்பான வழக்கில் நீதிபதி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பதிவு வெளியிட்டதாக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைதான நிர்மல் குமாரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் கடந்த 27-ஆம் தேதி த.வெ.க. பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து த.வெ.க. பொதுச் செயலா் ஆனந்த், துணைப் பொதுச் செயலா் நிா்மல்குமாா் உள்ளிட்டோா் மீது கரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதனையடுத்து அவர்கள் தலைமறைவாகினர். அவர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கெனவே இவ்வழக்கில் மாவட்டச் செயலர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.


