ரிசல்ட் வந்த ஒரு மாதத்தில் ஆப்சன்ட் ஆன மாணவர்களுக்கு மறுதேர்வு - திண்டுக்கல் லியோனி

 
leoni

பொதுத்தேர்வு முடிவுகள் வந்த ஒரு மாதத்தில், பிளஸ் 2 தேர்வில் ஆப்சண்ட் ஆன மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார். 

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கியது. முதல் நாளன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், மொழித் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது தெரியவந்துள்ளது. தேர்வு எழுத வராத மாணவர்கள் குறித்து விசாரிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் 50 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாதது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேர்வு எழுத வராத மாணவர்கள் குறித்து விசாரிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரிசல்ட் வந்த ஒரு மாதத்தில் மறுதேர்வு நடைபெறும். அதில் தேர்வில் தோல்வி அடைந்தவர்களோடு சேர்த்து தேர்வு எழுதாதவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வை 80 சதவீத மாணவ, மாணவிகள் எழுதியிருப்பதை வெற்றியாக கருதுகிறே. விடுபட்ட மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.