திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

 
PM Schools

கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு  நாளை (4.11.23) விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக திண்டுக்கல், கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | Rain  Holiday declared in Dindigul, Karur - hindutamil.in

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, அய்யம்பாளையம் பட்டிவீரன்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று திடீரென வெயிலுடன் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.மேலும் அப்பகுதிகளில் குளிர்ச்சியான காற்று வீசிவருகிறது. 

வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பகா கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடதக்கது.