சேலை மட்டும் கொடுத்தா போதுமா? பாவாடை இல்லாம எப்படி கட்டுறது?- திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு
இலவசமா சேலை மட்டும் கொடுத்தா போதுமா? அதை எப்படி கட்டுறது? பாவாடை வேண்டாமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புடவை மட்டும் கொடுத்தால் போதுமா?
— Sonia Arunkumar (@rajakumaari) March 17, 2026
திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சுpic.twitter.com/rPOlxQj9T4
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற போராட்டத்தில் சர்ச்சையாக பேசிய திண்டுக்கல் சீனிவாசனால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக சிவி சண்முகம் அநாகரீகமாக பேசிய நிலையில், சீனிவாசனும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “பணத்தை கொடுத்து வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர். ஏற்கனவே ரூ.100-க்கு ஹாட் பாக்ஸ் கொடுத்துள்ளனர். இலவசமா சேலை மட்டும் வாங்க் கொடுத்தா போதுமா? அதை எப்படி கட்டுறது? பாவாடை இல்லாமல் எப்படி கட்டுறதுனு பெண்கள் கேட்கின்றனர். நம் காசை எடுத்து நம்மையே கேவலப்படுத்துகிற இந்த ஆட்சி இருக்கவே கூடாது. நம்மை பார்த்து அடிமை ஆட்சி என சொல்லும் திமுகவுக்கு, அவர்கள் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் சரி, நம் சேர்ந்தால் தவறா?” என்றார்.

