இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் தினகரன் மரியாதை

 
yj

தீண்டாமைக்கு எதிராகவும், தேவேந்திரர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் போராடிய விடுதலைப் போராட்ட வீரரும், ஈகியருமான இமானுவேல் சேகரனாரின் 66-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

tn

இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவரும், தீண்டாமையை ஒழிக்க முனைப்போடு பாடுபட்டவருமான திரு.இம்மானுவேல் சேகரனாரின் 66ஆவது நினைவு நாளான இன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிடிவி தினகரன் மலரஞ்சலி செலுத்தினார் . '

tg

முன்னதாக  இம்மானுவேல் சேகரனார் அவர்களின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் அவருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.