எஸ்.எம்.பாக்கர் மறைவுக்கு தினகரன் இரங்கல்
Jun 21, 2024, 10:58 IST1718947680861
இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் .எஸ்.எம்.பாக்கர் மறைவுக்கு தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் திரு.எஸ்.எம்.பாக்கர் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.

இஸ்லாமிய சமுதாய மக்களின் கல்வி, வேலைவாய்ப்புக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த திரு.எஸ்.எம்.பாக்கர் அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


