’Fuck any girl' ஆபாச தகவலுடன் சர்ச்சைக்குரிய விளம்பர பலகை
சென்னையில் சர்ச்சைக்குரிய விளம்பர பலகை வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் சின்னமலை அருகே ஆபாச தகவலுடன் சர்ச்சைக்குரிய வகையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. அந்த விளம்பர பலகையில் ஒரு விடுதிக்கு மேல் “get in and fuck any girls @ 1,000/-” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாநகர காவல்துறையினரின் கவனத்துக்கு சென்ற நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தரப்பில் டிவிட்டர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் குற்றங்களை குறைக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும், பழைய குற்றவாளிகளை கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், பல்வேறு குற்ற நடவடிக்கைகள் சென்னை காவல்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளான லாட்ஜ் மற்றும் மேன்ஷன்களில் சோதனைகள் மேற்கொள்ளவும், முக்கிய இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் நடத்தவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை சென்னையில் உள்ள 600 லாட்ஜ் மற்றும் மேன்ஷன்களில் போலீசார் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டும், பல்வேறு இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கைகளை நடத்தியும் உரிய ஆவணங்கள் இல்லாத 103 வாகனங்களை பறிமுதல் செய்தது குறிப்பிடதக்கது.


