போலீஸ் டிஐஜி மகேஷ் குமார் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
Apr 14, 2025, 13:29 IST1744617556481

போலீஸ் டிஐஜி மகேஷ் குமார் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் டிஐஜி மகேஷ் குமார் சஸ்பெண்ட் உத்தரவை மாநில உள்துறை ரத்து செய்தது. சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக ரத்து செய்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். பாலியல் புகாரில், டிஐஜி மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். புகார்தாரரின் வேண்டுகோளின் படி, பாலியல் துன்புறுத்தல் புகார் சமரசம் மூலம் தீர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. மகேஷ் குமார் மீது மேல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீஸ் டிஐஜி மகேஷ் குமார் சஸ்பெண்ட் உத்தரவை மாநில உள்துறை ரத்து செய்தது.