"முதலமைச்சராக இருந்த ஸ்டாலினுக்கு உளவுத்துறை தகவல் தெரிவிக்கவில்லையா?" - அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது,
தி.மு.க ஆட்சியின் போது ஜெம் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்காதது ஏன்? இந்த விவகாரத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளது. வீரமணி வழக்கில் யார் மீது ஆதாரம் உள்ளதோ, யார் பணம் பறித்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்து உள்ளார்.
மேலும் 2024ம் ஆண்டே ஜெம் வீரமணி மீது காவல் துறையிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் சென்றுள்ளது.. உளவுத்துறை அதிகாரிகள் வீரமணி குறித்த தகவலை முதலமைச்சராக இருந்த ஸ்டாலினிடம் கூறினார்களா? இல்லையா? என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெம் வீரமணி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ கிடைத்த பிறகு ஆதாரங்களை கண்டுபிடிக்க திமுக ஆட்சியில் ஏன் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவில்லை? திமுக ஆட்சியில் ஜெம் வீரமணியிடம் பேரம் பேசியும், கட்டப்பஞ்சாயத்து செய்தும் 500 கோடி ரூபாய் வரை பணம் பறிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வருகின்றன.. முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார்?என அடுக்கடுக்கான கேள்விகளை அமைச்சர் கேட்டார்

