18,000 குழந்தைகள் கதறுவது ஸ்டாலினுக்கு எட்டவில்லையா? - இபிஎஸ் எழுப்பிய நெஞ்சை உலுக்கும் கேள்வி..!

 
1

புதுக்கோட்டை திலகா் திடலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில், அதிமுக வேட்பாளா்கள் சி. விஜயபாஸ்கா் (விராலிமலை), பி.கே. வைரமுத்து (திருமயம்), தன. விமல் (ஆலங்குடி) ஆகியோருக்கும் பாஜக வேட்பாளா்களுக்கும் வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியதாவது:

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; எனது கையில் ரத்தக் கறை படிந்திருப்பதாக ஸ்டாலின் பேசுகிறார். அஜித்குமார் மரணம், மானாமதுரையில் லாக் அப் மரணம் நடந்துள்ளது. அதுதான் ரத்தக்கறை படிந்த கை. 

பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. 5 ஆண்டுகால ஆட்சியில் 18,000 குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளனர்; அப்பா என அழைப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லும் ஸ்டாலினுக்கு அவர்கள் கதறுவது எட்டவில்லையா?

அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது; திமுக கொடுத்த வாக்குறுதியில் 4 சதவிகிதம்கூட நிறைவேற்றவில்லை; திமுகவில் ஆள் இல்லாததால் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் அமைச்சராக இருக்கிறார்கள்.

5 மாவட்டங்கள் பயன்பெறும் காவிரி-வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை முடக்கிவிட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கிறது போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்காத முதல்வரால் தான் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள் அதிகாித்துள்ளது. பலமுறை வலியுறுத்தியும் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை DGP நியமிக்கப்படாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.