ஜானகி அம்மா ஒரு பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் என்பது தெரியுமா?
80-களில் தொடங்கி இன்று வரை இருக்கும் 2k கிட்ஸ் வரை அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு குரல் எஸ்.ஜானகி அம்மாவின் குரல் . இளையராஜா-ஜானகி என்ற பிரிக்க, மறக்க முடியாத காம்போ. 80-களில் வந்த எல்லா திரைப்படங்களில் ஜானகி அம்மா குரல் ஒலிக்காத படங்களே இல்லை. தமிழ் , கன்னட, தெலுங்கு ,மலையாளம்,ஹிந்தி, கிட்டத்தட்ட 25 மொழிகளில் பாடியுள்ள பெருமை இவரையே சேரும். பல பாடல்களை தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
l ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.
l வி.சந்திரசேகர் என்ற கலைஞரின் நாடக இடைவேளைகளில்தான் முதலில் பாடத் தொடங்கினார். 1956-ல் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டுப் போட்டியில் 2-ம் பரிசு பெற்றார். இதைத் தொடர்ந்து சென்னை வந்தவர், ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக நியமனம் பெற்றார்.
1957-ஆம் ஆண்டு விதியின் விளையாட்டு படத்தில் முதல் பாடல் வாழ்க்கையை தொடங்கினார் . அனால் இந்த பாடல் முதலாக வெளியாகவில்லை "எம்எல்ஏ" என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடிய பாடலே முதலில் வெளிவந்தது .
l முதல் ஆண்டிலேயே 6 மொழிகளில் 100 பாடல்களைப் பாடினார். கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், ஜப்பான், ஜெர்மனி ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார். 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர்.
. இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இவர் பாடிய மச்சானா பாத்திங்களா பாடல் பட்டி தொட்டி எங்கும் இளையராஜா மற்றும் ஜானகி இசைக் காம்பவை ஒலிக்கச் செய்தது. அங்கிருந்து இவர்களின் காம்போ வெற்றி காம்போவாகவே தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று சவுத் இந்தியன் சினிமா முழுக்க கேட்கப்பட்டது எஸ்.ஜானகியின் குரல் .
25- ஆண்டுகள் தென்னிந்திய மொழிகள் மட்டும் அல்லாமல் கொங்கனி, துளு, சௌராஷ்ட்ஸ்ட்ரா,வங்காளம் ,சிங்களம்,ஆங்கிலம் , மற்றும் சீன மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார் .1992-ஆம் ஆண்டு சிங்களம் சென்றபோது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. மௌனப் போராட்டம் என்ற தெலுங்கு படத்தில் இசையமைப்பாளராக தனது பணியை தொடங்கினார் ஜானகி அம்மா. கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் வெளியான "சிங்கார வேலனே தேவா " இவருக்கு வெற்றி பாடலாக அமைந்தது. இன்று வரை பலரால் பாட முடியாத மிக கடினமான படலைகளில் இதுவும் ஒன்று. மிக நேர்த்தியாக மிக எளிதாக இந்தப் பாடலை பாடியிருப்பார் .
l ஏறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். ‘இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.ஜானகி’ கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசை வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்தவர் ஜானகி. இருவரும் இணைந்து பாடிய அணைத்து பாடல்களுமே மிக பெரிய ஹிட் . எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தனது ஒவ்வொரு பேட்டியிலும் ஜானகி அம்மாவை பேசாமல் இருந்ததே இல்லை .
l பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். இவர் பாடிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, ‘செந்தூரப் பூவே’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘ராதைக்கேற்ற கண்ணனோ’ போன்றவை காலத்தால் அழியாதவை.
l திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ரஹ்மான் அவர்களுடன் உயிரே படத்தில் "நெஞ்சினிலே" பாடல் , 2014-ஆம் ஆண்டு அனிருத் இசை அமைத்த விஐபி திரைப்படத்தின் "அம்மா அம்மா" பாடல் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரால் பாடப்பட்ட பாடல். நான்கு தேசிய விருது , 11 கேரள மாநில அரசு திரைப்பட விருதுகள், 10 நந்தி விருதுகள் , 6 தமிழ் திரைப்பட விருதுகள் ,1 ஒடிசா மாநில திரைப்பட விருது. என்று அவர் வாங்கிய விருதுகள் அதிகம் . 2013-ஆம் ஆண்டு ஜானகி அம்மாவிற்கு "பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்த விருது என்று "பத்ம பூஷன் " விருதினை நிராகரித்தார் .

