2 குழந்தைக்கு தந்தையை திருமணம் செய்வேன் என அடம்பிடித்த மகளை தந்தையே கொலை செய்தாரா?

 
2 குழந்தைக்கு தந்தையை திருமணம் செய்வேன் என அடம்பிடித்த மகளை தந்தையே கொலை செய்தாரா? 2 குழந்தைக்கு தந்தையை திருமணம் செய்வேன் என அடம்பிடித்த மகளை தந்தையே கொலை செய்தாரா?

சேலத்தில் தங்கி படித்து வந்த நெல்லையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ மாணவி காதல் விவகாரத்தில் மர்மமான முறையில் விடுதி அறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அடுத்துள்ள  சித்தர் கோவில் அருகில் சிவராஜ் தனியார் சித்த  மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு திருநெல்வேலி மாவட்டம்  வீரவநல்லூர் ,  பாரதி நகரை சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷினி (24) இறுதியாண்டு ஹோமியோபதி மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர் கல்லூரி அருகே உள்ள  நாக்கியம்பட்டியில் லட்சுமணன் என்பவரின் அடுக்குமாடி வீட்டில்,  தோழியுடன் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் அவரது தோழி ஊருக்கு சென்று விட்டு இன்று காலை அறைக்கு வந்துள்ளார். அப்போது படுக்கையிலேயே வர்ஷினி இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியை அடைந்த தோழி, சக நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார்.  இது குறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி, துணை ஆணையர் சிவராமன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மாணவி வர்ஷினி எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷம் குடித்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவி வர்ஷினியின் தந்தை வரதராஜன் நேற்று இரவு, மகள் வர்ஷினியின் அறைக்கு வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வரதராஜனின்  செல்போன் எண்ணிற்கு போலீசார் அழைத்தபோது, செல் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது, இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மாணவி வர்ஷினி ஒருவரை காதலித்து வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது தந்தை வரதராஜனுக்கு பிடிக்கவில்லை. மாணவி நெல்லையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் , அவர் ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது தனியாக வசித்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது. இந்த காதல் விவகாரம் வர்ஷினியின் தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனால் நேற்று இரவு மகளின் விடுதிக்கு வந்த வரதராஜன், அவரிடம் காதல் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இன்று காலை வர்ஷனியின் தோழி வந்து கதவை திறந்த போது கதவு வெளிப் பக்கமாக தாழிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கதவைத் திறந்து பார்த்த போது தான் வர்ஷினி இறந்து கிடந்துள்ளார்.  

எனவே போலீசார் வர்ஷினியின் தந்தை வரதராஜனை பிடித்து விசாரித்தால் உண்மை தெரியவரும் என்ற வகையில் அவரை தேடி வருகின்றனர். இதனிடையே நெல்லை வீட்டிற்கு வரதராஜன் செல்லவில்லை என்றும் தகவலும்  கிடைத்துள்ளது. எனவே மகளின் சாவில் அவரது தந்தையின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இது ஆணவக் கொலையாக இருக்கலாமா? என்ற வகையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் மாணவி வர்ஷினி விஷத்தினால்  இறந்தாரா?  அல்லது வேறு எப்படி இறந்தார் என்பது தெரிய வரும்.