தீபாவளிக்கு டாஸ்மாக் வசூல் இவ்வளவு கோடியா?

 
tasmac

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தீபாவளி விடுமுறையையொட்டி கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், மது விற்பனை குறித்த விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு  ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.158 கோடியே 25 லட்சத்திற்கு விற்பனையானது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் மட்டும் ரூ.441.38 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் ரூ.234.75 கோடிக்கும், தீபாவளியன்று ரூ.206.63 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் ரூ.98.97 கோடிக்கு தீபாவளி மது விற்பனை நடைபெற்றுள்ளது.