தமிழக முதல்வர் விஜய் காவி சட்டையில் பிரதமர் மோடியை வரவேற்றாரா? வைரல் படம் உண்மையானதா?

 
1

தமிழக முதல்வர் விஜய் காவி சட்டை அணிந்து பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஜோசப் விஜய் காவி சட்டையில் பிரதமர் மோடியை வரவேற்றதாக புகைப்படம் பரவும் புகைப்படம் குறித்து தேடியபோது, தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றது தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

அதில், விஜய் பிரதமர் மோடிக்குச் சால்வை அணிவித்து வரவேற்கும் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், அந்தப் புகைப்படத்தில் விஜய் காவி நிறச் சட்டை அணிந்திருக்கவில்லை. அவர் கருநீல நிறச் சட்டையே அணிந்திருந்தார்.

பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து வரவேற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்.

தொடர்ந்து ஆய்வு செய்தபோது, தினமணி, தினத்தந்தி, விகடன் உள்ளிட்ட ஊடகங்களிலும் பிரதமர் மோடியை விஜய் வரவேற்ற புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்தன. அந்தப் புகைப்படங்களிலும் விஜய் கருநீல நிறச் சட்டை அணிந்திருப்பதைக் காண முடிந்தது.

இதன் அடிப்படையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் காவி நிறச் சட்டை அணிந்து பிரதமர் மோடியை வரவேற்றதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது. அசல் புகைப்படத்தில் அவர் கருநீல நிறச் சட்டை அணிந்திருந்தார்.

விஜய் காவி நிறச் சட்டை அணிந்து மோடியை வரவேற்றதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்.

வைரல் படம்

மோடியை விமான நிலையத்தில் கருநீல நிறச் சட்டை அணிந்து வரவேற்கும் முதலமைச்சர் விஜய்.

அசல் படம்