தனது ரசிகரின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டாரா ரஜினி..? இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகர்கள்

 
தனது ரசிகரின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டாரா ரஜினி..? இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகர்கள்

சென்னை வேலப்பன்சாவடியில் நடைபெற்ற ரஜினி ரசிகரின் மகள் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்த ரஜினி கட் அவுட் உடன் வந்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அளித்தனர்


சென்னை திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான ரஜினி பாஸ்கர் அவரது மகள் சுவேதா -சந்திப் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் என யோசித்த ரஜினி ரசிகர்கள் ரஜினி உருவம் பதித்த கட்டவுட்டை பரிசாக அளித்து ரஜினியே கலந்து கொண்டது போல கொண்டாடினர்.இது மணமகள் வீட்டாரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.ரஜினியின் தத்ரூப கட்டவுட்டில் பலர் செல்பி எடுத்து சென்றனர்.