பழனிசாமி மதுவிலக்குக்கு எதிரா போராட்டம் நடத்தியது உண்டா?? - திருமா கேள்வி..

 
thiruma


திமுக கூட்டணி கட்சி தலைவர்களை கேள்வி கேட்கும் எடப்பாடி பழனிசாமி மதுவிலக்குக்கு எதிராக போராட்டம் நடத்தியது உண்டா? என  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

செங்கல்பட்டு மற்றும் மரக்காணம் பகுதிகளில்  கள்ளச்சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  இதனிடையே கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுபேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார்.  இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து நலம் விசாரித்தார்.  

edappadi palanisamy

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பூரண மதுவிலக்கை அமல் படுத்துவதற்கு தேசிய அளவில் கொள்கை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கள்ளச்சாராயம் இறப்பு விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மவுனமாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசியதை அவர் விமசித்தார். மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தினால் அவரோடு சேர்ந்து குரல் கொடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தயாராக உள்ளது” என்று  திருமாவளவன் தெரிவித்தார்.