தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டாரா ஓபிஎஸ்..?

 
1

கடந்த சில தினங்களாக  வேட்பாளர்களிடையே பல்வேறு மோதல் சம்பவங்களும் நடைபெறுவதுடன் தேர்தல் நடத்தை விதிமீறல்களும் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேட்புமனு தாக்கலின் போது வாக்குவாதங்களும் மோதல்களும் நடைபெற்றது. அவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு பார்வைக்கு சென்றுள்ளதால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேட்பாளர்களிடம் உரிய விளக்கம் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இது ஒருபுறம் இருக்க ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ராமநாதபுகம் தொகுதியில் பாஜக தலைமையலினா தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 2 நாட்களாக அவர் பெயரில் 5 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஓ.பி.எஸ்.சை சந்தித்த நபர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தன்னுடன் ஃபோட்டோ எடுத்த எடுத்துக்கொண்டவருக்கு 500 ரூயாயை ஓபிஎஸ் கொடுத்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஓபிஎஸ் நடந்து கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.