முருகனையும் முதல்வர் விஜய்யையும் ஒப்பிட்டுப் பாடினேனா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த புஷ்பவனம் குப்புசாமி!

 
Q

திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்வைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

அப்போது, அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் விஜய்யை முருகப்பெருமானுடன் ஒப்பிட்டு பாடியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த விவகாரத்தில் தவெக அரசுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இந்த பாடலை பாடிய இயல் இசை நாடக மன்ற தலைவரும், பிரபல பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, 

திருச்செந்தூரில் நடந்த இசைக்கச்சேரியில் நான் பாடிய பாடலை குறை சொல்லி பலரும் என்னைத் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் திட்டும் அளவிற்கு நான் எதுவுமே பாடவில்லை. திட்டுவதற்கு உரிமை உண்டு. பாராட்டுகிற நீங்கள்தான் திட்டுகிறீர்கள். ஆனால், எதற்காக திட்டுகிறோம் என்று தெரிந்து திட்ட வேண்டும்.

நான் பாடிய பாடலில் எந்த குறையும் இல்லை. நான் பாடியது இதுதான், நம் தமிழக முதல்வர் போல் அந்த இடத்தில் கமா (,) உள்ளது. தமிழக முதல்வர்போல், வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக் கொண்டால் யாரிடம் வேண்டிக் கொண்டால், நம் தமிழக முதல்வர் போல வேண்டிக்கொண்டால், யாரிடம் வேண்டிக் கொண்டால்? வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டால், வெற்றி நிச்சயம் உண்டு. இப்போது புரிகிறதா?

வெற்றி நிச்சயம் உண்டு. யாருக்கு வெற்றி நிச்சயம் உண்டு? நம் தமிழக முதல்வர் வேண்டிக்கொண்டது போல நாமும் வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்று சொல்லியிருக்கிறேன். 

வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம்வேண்டும் வரம் கேளுங்கள்.. வெற்றி உண்டு வாருங்கள்...

இப்போது புரிகிறதா? அவரை நான் சாட்சியாக சொல்கிறேன். வெற்றி எப்படி நிச்சயம்? அதற்கு ஒரு சாட்சி வேண்டும். நீங்களும் வேண்டும் வரம் கேட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்லியிருக்கிறேன். இதில் என்ன குறை இருக்கிறது? எல்லாேரும் சேர்ந்து என்னைத் திட்டுகிறீர்கள்.

முருகனுக்காக ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறேன். தமிழறிந்த நான் இதில் பிழை செய்வேனா? முருகனுடன் ஒப்பிட்டுப் பாடியிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். எங்கே ஒப்பிடு இருக்கிறது? சாட்சியாகத்தான் நான் அவரை வைத்துள்ளேன். முருகனுடன் அவரை ஒப்பிடவில்லை. ஆகவே, முருகப்பெருமானின் அருள் பேரருளுக்கு நிகர் எதுவும் கிடையாது. அவருக்கு நிகர் யாருமில்லை. இதைப் புரிந்து கொள்ளுங்கள். 

நான் யாரையும் ஒப்பிடவில்லை. யாரையும் குறைசொல்லவும் இல்லை. இதை அறிந்து கொண்டு மேற்கொண்டு மேற்கொண்டு திட்டுவதை விட்டுவிடுங்கள்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.