"கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன்..." மிரள வைக்கும் மாரி செல்வராஜ்

 
tn

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு பைசன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

mari selvaraj

 இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு,  உதயநிதி,  பகத் பாசில் நடித்த திரைப்படம் மாமன்னன்.  கடந்த 2023 ஆம் ஆண்டு இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.  இப்படத்தை தொடர்ந்து வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வந்தார்.  குழந்தைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி வந்தது.  இதில் கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  


இந்நிலையில்  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் மற்றொரு புதிய படத்திற்கு பைசன் என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தில் துருவ்  விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.  இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் நிலையில் எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இப்படத்தை  தயாரிக்கின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது .