துருவ் - அனுபமா காதல் முறிவா?

 
ச்

துருவ் - அனுபமா காதலித்ததாக கூறப்பட்ட நிலையில், இருவருக்கும் பிரேக் அப் ஆனதாக தகவல் பரவியதை தொடர்ந்து, அனுபமாவின் இன்ஸ்டா பதிவு கவனம் ஈர்த்துள்ளது.

அனுபமா பரமேஸ்வரன் - துருவ் விக்ரம் காதலிக்கிறார்களா? வைரலாகும் முத்த  புகைப்படம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருந்த படம், பைசன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அனுபமா நடித்திருந்தார். படத்தின்போது இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பேசுபொருளானது. 

இந்நிலையில் துருவ் - அனுபமா காதலித்ததாக கூறப்பட்ட நிலையில், இருவருக்கும் பிரேக் அப் ஆனதாக தகவல் பரவியதை தொடர்ந்து, அனுபமாவின் இன்ஸ்டா பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அந்த பதிவில், “இறுதியில் என் மன அமைதியை கண்டுபிடிக்க சில முடிவுற்ற பாதைகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இனி என் குரலையும், என் வாழ்க்கையையும் நானே தேர்ந்தெடுக்கிறேன். யாருடைய அனுமதியும் தேவையில்லை. எந்த பயமும் இல்லை. என்னை நான் மீண்டும் கண்டுபிடித்து, என் வாழ்க்கையை மீண்டும் நேசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

மேலும், நான் மிக நீண்ட காலமாகச் சொல்ல விரும்பிய ஒன்று இருக்கிறது... மிக நீண்ட காலமாகச் சொல்ல அனுமதிக்கப்படாத ஒன்று.உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். எனக்குத் துணையாக நின்றதற்கும், என் மீது நம்பிக்கை வைத்ததற்கும், என் வாழ்க்கையை இவ்வளவு அன்பால் நிரப்பியதற்கும் நன்றி.ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு பிரார்த்தனையும், ஒவ்வொரு துளி கருணையும் எனக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் என்னை வந்தடைந்தது.பிரபஞ்சமே, என்னை மீண்டும் எனக்குள் வழிநடத்தியதற்கு நன்றி.குணமடைவதற்கு வாழ்த்துக்கள். சுதந்திரத்திற்கு வாழ்த்துக்கள். என்னை நானே தேர்ந்தெடுப்பதற்கு வாழ்த்துக்கள். இறுதியாக, முழுமையாக, தயக்கமின்றி என்னுடையதாக இருக்கும் ஒரு வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.