"தோனி எப்போதும் எங்களது அடையாளத்தின் ஒரு பகுதியாக இருப்பார்"- சிஎஸ்கே உரிமையாளர் உருக்கம்

 
"தோனி எப்போதும் எங்களது அடையாளத்தின் ஒரு பகுதியாக இருப்பார்"- சிஎஸ்கே உரிமையாளர் உருக்கம் 

தோனி எப்போதும் எங்களது அடையாளத்தின் ஒரு பகுதியாக இருப்பார். சிஎஸ்கே அணி எப்போதும் அவரது வீடாகவே இருக்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில், "எம்.எஸ். தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக வெற்றி, தோல்வி என எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் ஒன்றாகப் பயணித்து வளர்ந்துள்ளோம். எங்களது உறவு இவ்வளவு வலுவாக இருப்பதற்கு ஒரே காரணம், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கைதான். ஒருவரது நோக்கத்தின் மீதும் மற்றொருவர் ஒருபோதும் சந்தேகம் எழுப்பியதில்லை. அந்த நம்பிக்கையே இந்தப் பயணத்தை சாத்தியமாக்கியது.

2008ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் தோனி இடம்பெற வேண்டும் என்று நான்தான் வலியுறுத்தினேன். அது நான் எடுத்த மிகச்சிறந்த முடிவு என்பது இப்போது தெரிகிறது. சிஎஸ்கே அணிக்காக அவர் படைத்த சாதனைகளுக்காக மட்டுமல்ல, அவர் எப்படிப்பட்ட சிறந்த மனிதர் என்பதற்காகவும் இந்த முடிவு சிறப்பானது. தோனி எப்போதும் எங்களது அடையாளத்தின் ஒரு பகுதியாக இருப்பார். சிஎஸ்கே அணி எப்போதும் அவரது வீடாகவே இருக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.