தேனியில் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் தினகரன்

 
ttv

தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் டிடிவி தினகரன்.

TTV

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்றன. அதில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பேச்சு வார்த்தையில்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. 

tn
இந்நிலையில் டிடிவி தினகரன் வரும் 24ஆம் தேதி தேனியில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். இதுதொடர்பாக அம்மா மக்கள்  முன்னேற்ற கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 24.03.2024 முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 24.03.2024 அன்று தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.