சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சிறுவன் - தினகரன் வாழ்த்து

சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சிறுவனுக்கு தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டி துருக்கியில் நடைபெற்ற நிலையில் 42 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர் . இதில் இந்தியாவில் இருந்து 17 பேர் கலந்துகொண்டு நான்கு பதக்கங்களை வென்றனர். குறிப்பாக தமிழக வீரர் பரத் விஷ்ணு தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். தாம்பரம் அருகே உள்ள முடிச்சுரை சேர்ந்த 14 வயதான பரத் விஷ்ணு கிக் பாக்ஸிங் போட்டியில் அனைத்து சுற்றுகளில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டி சென்றுள்ளார். கிக் பாக்ஸிங் போட்டியில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து தந்த பரத் விஷ்ணுவை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
துருக்கி இஸ்தான்புல் நகரில் நடந்த சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னை தாம்பரம் முடிச்சூரை சேர்ந்த 14 வயது சிறுவன் பரத் விஷ்ணு தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 25, 2023
42 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில் பரத்…
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "துருக்கி இஸ்தான்புல் நகரில் நடந்த சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னை தாம்பரம் முடிச்சூரை சேர்ந்த 14 வயது சிறுவன் பரத் விஷ்ணு தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
42 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில் பரத் விஷ்ணு அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பது தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமையாகும்.
தங்கப்பதக்கம் வென்ற பரத் விஷ்ணு, அவரது பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினருக்கு இந்த தருணத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் அவர் மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகின்றேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.