எப்படியாவது இந்துக்கள்-முஸ்லீம்கள் இடையே வெறுப்பை உண்டாக்க முயற்சிக்கிறீர்கள் - தயாநிதி மாறன்

 
Dhayanidhi maran

மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்.பி தயாநிதி மாறன் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். 

 
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நேற்று வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். இந்த நிலையில், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். மசோதா மீது நள்ளிரவு வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடந்தது. வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமைகாக குற்றம் சாட்டினர். 
இது தொடர்பாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி தயாநிதி மாறன், எப்படியாவது இந்துக்கள் - முஸ்லீம்கள் இடையே வெறுப்பை உண்டாக்க முயற்சிக்கிறீர்கள். ஆடு நனையுதுனு என ஓநாய் அழுகலாமா? முஸ்லீம்களுக்கு பிரச்னை என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?நீங்கள் பசுத்தோல் போர்த்திய புலி.. நல்ல எண்ணத்தில் நீங்கள் இதனை செய்யவில்லை என கூறினார்.