கள்ளக்காதல் விவகாரம்- கணவனே மனைவியை கழுத்தறுத்து படுகொலை செய்த கொடூரம்

 
murder

பஞ்சப்பள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், கணவனே மனைவியை கழுத்தறுத்து படுகொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.


தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே  ஜெல்திம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் (35) சென்னையில் பூ மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.  திருமணமான நிலையில் மனைவி நிவேதிதா (33) மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளும் சொந்த ஊரில் வசித்து வந்தனர். இந்த நிலையில், நிவேதிதாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, திருமணத்தை மீறி உறவு ஏற்பட்டது. இந்த தகாத உறவு குறித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாக்யராஜ் தெரியவந்ததால், நிவேதிதாவை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம்  ஆகியும், பாக்யராஜின் வீட்டின் கதவு திறக்காதால் பாக்யராஜின் தந்தை ராஜாமணி கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது நிவேதிதா படுக்கையறையில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்ததைப் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் பஞ்சப்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது‌.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் நிவேதிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்த  கணவர் பாக்யராஜ், பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதலன் தனிமையில் இருக்கும் போது செல்போனில் படம் எடுத்து வைத்திருந்தது, பாக்யராஜுக்கு தெரிய வந்துள்ளது. இது தெரிய வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவேதிதாவை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு வந்துள்ளார். பின்பு ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் ஊர் மத்தியில் கணவன் மனைவி இருவரையும் சமாதானம் செய்த பிறகு, மீண்டும் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கலாம், அதனால் இந்த கொலை நடந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த  சம்பவம் குறித்து பஞ்சப்பள்ளி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.