”எனது வெற்றிக்கு காரணம் முதல்வர் விஜய் மட்டுமே” - தாராபுரம் தவெக எம்.எல்.ஏ சத்யபாமா பேட்டி!
தாராபுரம் எம்.எல்.ஏவாக இன்று பதவியேற்றின்னர் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார் சத்யபாமா.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ.சத்யபாமா, “மரகதம் குமரவேலை விட எனக்கு தாராபுரம் தொகுதியில் அதிக பிரச்சனைகள் கொடுத்தார்கள். போர்களங்களில் வெற்றி பெறுவது போல் தான் நான் இந்த வெற்றியை அடைந்துள்ளேன். கடந்ததேர்தலைவிட இப்போது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருப்பது மிகப்பெரிய வெற்றி என்றே சொல்ல வேண்டும். தாராபுரத்தில் எனது வெற்றிக்குக் காரணம் முதல்வர் விஜய் மட்டுமே. இது ஒரு சரித்திர வெற்றி. மக்கள் இவ்வளவு உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடி நான் பார்த்ததில்லை. இப்போது மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியின் மூலம் விடிவு வரப்போகிறது என்பதை அவர்கள் முழுமையாக உணர்ந்துள்ளார்கள்.
எடப்பாடி பழனிசாமி என் மீது வைத்த குற்றச்சாட்டிற்கு நான் என்னுடைய செயலில் பதில் சொல்வேன். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக, முதலில் தொகுதியில் உள்ள தண்ணீர் பிரச்சினை மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளைச் சரிசெய்ய வேண்டும். என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் பொய் என மக்களே பதிலளித்துள்ளார்கள். இது வெற்றிகரமான தோல்வி அல்ல வெற்றி, வெற்றிதான். கூட்டணி கட்சிகளின் Support 100 % இருந்தது.. இடைத்தேர்தலுக்கு கடுமையாக உழைப்பை கொடுத்தாங்க” என்றார்.

