தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு..!
நடிகர் தனுஷ் வரும் திங்கட்கிழமை சென்னையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக அரங்கம் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
நடிகர் தனுஷ் வரும் திங்கட்கிழமை சென்னையில் ரசிகர்களை சந்திக்கிறார். தொடர்ந்து தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி நடத்த அரங்கம் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. `ஓம்' படப்பிடிப்பால் சில மாதங்களாக ரசிகர்கள் சந்திப்பு தள்ளிவைக்கப்பட்டது. மீதமுள்ள 23 மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க நடிகர் தனுஷ் திட்டமிட்டுள்ளார். முன்னதாக வரும் ஞாயிற்றுக் கிழமை மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள நடிகர் தனுஷ் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் நிர்வாகிகளை சந்தித்து, மகளிரணியை பலப்படுத்த உள்ளார். கட்சி தொடங்குவது தொடர்பாக நேற்று தனுஷ் டெல்லி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி பயணம், ரசிகர் மன்றத்தின் மறுசீரமைப்பு, புதிய கொடி அறிமுகம் என அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக தனுஷ் நல இயக்க மாவட்டச் செயலாளர் மாரிமுத்து கூறுகையில்,"தனுஷ் அண்ணா தனது அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுப்பார். அவர் அரசியலுக்கு வர முடிவு செய்தால், நாங்கள் அவருக்கு ஆதரவளிப்போம். ஒருவேளை அவர் அரசியலுக்கு வரவில்லை என்றாலும், நாங்கள் அவருக்கு ஆதரவளிப்போம். நாங்கள் அவருடைய ரசிகர்கள்" என்றார்.

