தேசிய விருதுக்கு தனுஷ் நெகிழ்ச்சி பதிவு..! நடிகராக 3-வது முறை; இயக்குநராக முதல் விருது..!
'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதும், சிறந்த சமூக அக்கறைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அருண் மாதேஸ்வரன் இயக்கிய 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான (சிறப்பு விருது) தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 'அமரன்' திரைப்படம் மூன்று தேசிய விருதுகளையும், 'மகாராஜா' இரண்டு தேசிய விருதுகளையும், 'மெய்யழகன்' ஒரு தேசிய விருதையும் வென்றுள்ளது.
இந்த நிலையில் தேசிய விருது கிடைத்தது குறித்து நடிகர் தனுஷ் மகிழ்ச்சித் தெரிவித்ததுடன், தேசிய திரைப்படத் தேர்வுக் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது குறித்து திரைப்பட நடிகரும், இயக்குநருமான தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராயன் திரைப்படத்திற்காக சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதையும், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய திரைப்பட விருதுகள் நடுவர் குழுவிற்கும், தேர்வுக் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அதேபோல் தனது திரைப் பயணம் முழுவதும் ஆதரவு வழங்கிய ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது ஒரு நடிகராக நான் பெறும் மூன்றாவது தேசிய விருது, ஒரு இயக்குநராக நான் பெறும் முதல் தேசிய விருது ஆகும். எனது பலத்தின் தூண்களான எனது ரசிகர்கள் இல்லாமல் இவை எதுவும் சாத்தியமாகியிருக்காது. எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் எனது நடிப்பு மிகச்சிறந்தது என்று நான் எப்போதும் இன்று வரை நம்பி வந்திருக்கிறேன். இந்த படத்திற்கான விருது என்பது இந்த கௌரவத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்குகிறது.
மேலும், ஒரு முதல் அனுபவம் எப்போதும் மறக்க முடியாது; அந்த வகையில் 'ராயன்' திரைப்படத்திற்காக ஒரு இயக்குநராக வென்ற முதல் தேசிய விருதை வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்." இவ்வாறு நடிகர் தனுஷ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
OM NAMASHIVAAYA 🙏😇❤️ pic.twitter.com/3wkQYHER25
— Dhanush (@dhanushkraja) July 18, 2026

