என் மீது எழுந்த குற்றச்சாட்டுகள்... உறுதுணையாக நின்ற நடிகர் சங்கத்திற்கு நன்றி- நடிகர் தனுஷ்

 
dhanush

என் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில் உறுதுணையாக இருந்த நடிகர் சங்கத்திற்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

Dhanush


இதுதொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தயாரிப்பாளர்கள், தேனாண்டாள் பிலிம்ஸ் (திரு. முரளி அவர்கள்) மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் (திரு கதிரேசன் அவர்கள்) எழுப்பிய புகார்களை, தீர்க்க உதவிய நம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்பிகிறேன். உங்கள் சரியான தலையீடு மற்றும் நேர்மையான வழிகாட்டுதல், எங்களை நோக்கிய சவால்களை சமாளிக்கவும் பரஸ்பர நன்மை பயக்கும் உடன்பாட்டை அடையவும் எங்களுக்கு உதவியது.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு (FEFSI) ஆகியவற்றுடன் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை நான் குறிப்பாக அங்கீகரிக்க விரும்புகிறேன்.
உங்கள் முயற்சிக்கு என் ஆழ்ந்த நன்றிகள். தங்கள் உதவி பொருட்டு 11/09/2024 அன்று எங்கள் படப்பிடிப்பை மீண்டும் நல்லவிதமாக தொடங்க முடிந்தது. தங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்காக திரு. நாசர் அவர்கள், திரு.கார்த்தி, திரு.விஷால், திரு.கருணாஸ் மற்றும் திரு.பூச்சி முருகன் ஆகியோருக்கு நான் சிறப்பு நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பது எங்களுக்கு உதவியது மட்டுமல்லாமல், தொழில்துறைக்கு ஒரு நேர்மறையான முன்னுதாரணத்தையும் அமைத்துள்ளது. நம் நடிகர் சங்கம் முயற்சித்து வரும் பல சிறந்த திட்டங்களுக்கும் முன்னெடுப்புகளுக்கும் எனது மனமார்த்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.