"என் பெயரில் நிறைய வதந்திகள் பரவுகிறது! எனது இதயம் 'Fans Fans' என்று துடிக்கும்"- தனுஷ்

 
"என் பெயரில் நிறைய வதந்திகள் பரவுகிறது! எனது இதயம் 'Fans Fans' என்று துடிக்கும்"- தனுஷ் 

எல்லாருக்கும் இதயம் லப் டப் என்று தான் துடிக்கும் ஆனால் எனது இதயம் பேன்ஸ் பேன்ஸ் என்று துடிக்கும் என  நடிகர் தனுஷ் பேசினார். 

Actor dhanush speech

சென்னையில் நடைபெற்ற ஓம் இசை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய நடிகர் தனுஷ், "என் பெயரில் நிறைய வதந்திகள் பரவுகிறது. இவரை அவர்கள் தூக்குகிறார்கள், இவர் பின்னால் இவர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள். என்னை இயக்குவதற்கு இறைவன், என் பின்னால் இருப்பது ரசிகர்கள், என் பக்கம் இருப்பது மக்கள். மக்கள் என் பக்கம். அண்டர்டாக் -னு ஒரு கான்செப்ட் இருக்கு, வாழ்நாள் முழுவதும் நான் அண்டர்டாக் தான். பல பேர் என்னை குறைத்து மதிப்பிடுவார்கள், மட்டம் தட்டுவார்கள். ஆனால் ஒன்று, அவர்கள் குறைத்து மதிப்பிட மதிப்பிட, மட்டம் தட்ட தட்ட, அவர்களுக்கே தெரியாமல் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அண்டர்டாக்காக இருந்து ஜெயிப்பதில் ஒரு தனி கிக் இருக்கிறது! 

நிறைய நல்ல திட்டங்களைச் செய்து வருகிறீர்கள். அனைத்தையும் நான் கவனித்து வருகிறேன். இதைவிட எனக்குப் பெருமை என்ன இருக்க முடியும்? ஒரே ஒரு கோரிக்கை, உங்கள் குடும்பத்திற்குச் செலவழித்தது போக மீதமிருப்பதை நல்ல திட்டங்களுக்குப் பயன்படுத்துங்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்படி மழை பாதிப்பு ஏற்பட்டால், எனது ரசிகர்கள் தன்னார்வலர்களாக முன்வந்து மக்களுக்கு உதவ வேண்டும். நாம் என்ன பேசினாலும் ஏதாவது ஒன்றை பேசத்தான் போகிறார்கள். பேசலாம். எல்லோருக்கும் ஹார்ட் ‘லப்டப் லப்டப்’ என்று தான் துடிக்கும். ஆனால் எனக்கு 'Fans Fans' என்று துடிக்கும்" என பேசினார்.