வேகம் எடுக்கும் நடிகர் தனுஷின் அரசியல் நகர்வு?

 
வேகம் எடுக்கும் நடிகர் தனுஷின் அரசியல் நகர்வு?

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கோவை மாவட்ட ரசிகர் மன்றத்தை தொகுதி வாரியாக பிரித்து நடிகர் தனுஷ் நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர், மேட்டுப்பாளையம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் தனுஷ் ரசிகர்கள் நற்பனி மன்றம் தொடங்கப்படவுள்ளது. 5 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கைக்கு கோவை மாவட்ட தலைவர் சங்கரை தொடர்புகொள்ளுமாறு நடிகர் தனுஷ் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரித்து ரசிகர் மன்ற மாவட்டதலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.