3000 சட்ட ஆலோசகர்களை நியமிக்க திட்டமிடும் தனுஷ்!
Oct 30, 2026, 18:42 IST1793365950971
தமிழ்நாடு முழுவதும் தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பில் 3000 சட்ட ஆலோசகர்களை நியமிக்க நடிகர் தனுஷ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றிய தனுஷ், தமிழக அரசியலில் கால் பாதிக்கும் பணிகளை முடிக்கிவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பில் 3000 சட்ட ஆலோசகர்களை நியமிக்க நடிகர் தனுஷ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு சட்ட ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு உதவும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை தனுஷ் வெளியிட வாய்ப்பு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

