பிரபல நடிகருக்கு மருத்துவ உதவி செய்த தனுஷ்!
‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அபினய். அப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பல்வேறு படங்கள் நடித்து வந்தார். பின்பு பட வாய்ப்புகள் இல்லாமல் முடங்கினார். அவருடைய உடல்நிலையும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.
சமீபத்தில் அபினய்க்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்து வந்தார். இதை அறிந்த நடிகர் பாலா அவரை நேரில் சந்தித்து 1 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷுக்கு நிகரான கதாநாயக வேடத்தில் அவர் நடித்திருந்தார். ஆனால் அந்த படத்தின் வெற்றியில் தனுஷுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது போல அபினய்க்குக் கிடைக்கவில்லை.
அவரும் ஓரிரு படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் அந்த படங்கள் அவருக்குப் பெரிய வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. சில படங்களில் பிற மொழி நடிகர்களுக்கு பின்னணிக் குரலும் கொடுத்துள்ளார். அதில் முக்கியமானது துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜமாலுக்கு அவர் பேசிய டப்பிங்.
இந்நிலையில் கல்லீரல் பாதிப்புக் காரணமாக உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிலையில் அவருக்கு மருத்துவ செலவுக்காக ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் தனுஷ்.

