ஆபரேஷன் கஞ்சா சோதனையில் இதுவரை 20,000 பேர் கைது: டிஜிபி சைலேந்திரபாபு

 
DGP

ஸ்ரீவில்லிபுத்தூர்  தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக ஜாதி கலவரம், துப்பாக்கி சூடு,மத கலவரம் உள்ளிட்ட எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை என 
டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

Image


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலை பகுதியில் உள்ள ராஜபாளையம் 11- வது பட்டாலியனில் டிஜிபி சைலேந்திரபாபு   ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவிலேயே புலன் விசாரணையில் தமிழக காவல் துறை முதல் இடத்தில் உள்ளது. தமிழக காவல்துறை நடவடிக்கைகளை பிறமாநிலங்களும் பின்பற்றுகின்றனர். மத்திய பிரதேசத்தில் நடந்த காவல் துறைக்கான பணிதிறன்கள்  போட்டியில் தமிழக காவல்துறை 8 தங்கம் உட்பட 11 பதக்கங்கள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் ரிவால்வர் பிரிவில் முதல் முறையாக தமிழக காவல்துறையை சேர்ந்த கான்ஸ்டபிள் தங்கப்பதக்கம் வென்றார். அந்த போட்டியில் சிஆர்பிஎப், பிஎஸ்எப் படை பிரிவுகளை பின்னுக்கு தள்ளி தமிழக காவல் துறை சாம்பியன் பட்டம் வென்றது. 

95-96 ஆண்டுகளில் ராஜபாளையம் பகுதியில் மிகப்பெரிய ஜாதி கலவரம் நடைபெற்றது.அப்போது  ராஜபாளையம் கேம்பில் 8 மாதம் தங்கி இருந்து பணியாற்றினேன்.  ந்த ஜாதி கலவரத்தில் 48 கொலைகள் நடந்தது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக காவல் துறையின் சிறப்பான செயல்பட்டால் தமிழகத்தில் ஜாதி, மத கலவரம் இல்லை.துப்பாக்கி சூடு,வடமாநில கொள்ளை, தொடர் கொலை உள்ளிட்ட எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் தமிழகத்தில் இல்லை. தமிழகம் அமைதியாக இருப்பதற்கு காரணம் பட்டாலியன். காவல் துறைக்கு பலமாக ராணுவமாக பட்டாலியன் படை பிரிவு உள்ளது.  நான் டிஜிபியாக பொறுப்பேற்ற பின் ஆயிரம் சார்பு ஆய்வாளர்கள், 10 ஆயிரம் காவலர்கள் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இப்போது 444 பேர் எடுக்கப்பட்டு தற்போது பயிற்சியில் உள்ளனர். 3,600 காவலர் பணிக்கு தேர்வு முடிந்துள்ளது. வரும் மே மாதம் புதிதாக 600 சார்பு ஆய்வாளர்கள், 3,600 காவலர்கள் சேர்க்கப்பட உள்ளனர். 

தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் கஞ்சா  சோதனையில் இதுவரை 20,000 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2,000 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன” என்றார்.