தலைமறைவாக இருந்த 3 பயங்கரவாதிகள் 2 ஆபரேஷன்கள் மூலம் கைது - டி.ஜி.பி.சங்கர் ஜிவால்
தலைமறைவாக இருந்த 3 பயங்கரவாதிகள் 2 ஆபரேஷன்கள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர் என டி.ஜி.பி.சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாஅளாரக்ளிடம் பேசிய டி.ஜி.பி.சங்கர் ஜிவால், “நீண்ட காலமாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க ஆபரேஷன் நடைபெற்றது. கோவை போலீசார், ஆந்திர போலீசார், தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு போலீசார் 3 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தீவிரவாத தடுப்பு போலீசார் மிகவும் வெற்றிகரமாக இதனை நிகழ்த்தினர். 0 ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அபுபக்கர் சித்திக் மீது தமிழ்நாட்டில் 5 வழக்குகள், கேரளாவில் 2 வழக்குகள் உள்ளன. ஆபரேஷன் அறம் மூலம் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புடையவர். பயங்கரவாத எதிர்ப்புப் படையில் 181 அதிகாரிகள் உள்ளனர். 2012 வரை அபுபக்கர் சித்திக் தொடர்ந்து குற்றங்களை செய்து வந்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம். போலி அடையாளங்களை பயன்படுத்தி இவர்கள் தலைமறைவாக இருந்துள்ளனர். குற்றங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது. வரும் காலங்களில் பயங்கரவாதம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையில் இருந்து தமிழ்நாடு விடுவிக்கப்படும்” என்றார்.


